மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் அருள்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்நாதன் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு எர்ணாமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது மாமா சுப்பிரமணி என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது பூவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சோழபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சோழவரம் கூட்ரோடு அருகில் வந்து கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இந்த விபத்தில் அருள்நாதனுக்கு தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த சுப்பிரமணியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருள்நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் எதிரே வந்து மோதிய ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இது குறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.