முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரன் பகுதியில் தச்சுத் தொழிலாளியான சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் கடந்த 3-ஆம் தேதி சின்ன சூலாமலை பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவியான சிந்து(21) என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பவித்ரா தனது கணவர் மீது குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்த சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.