பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டிலும் குரூப் 4 முறைகேடு போன்று வாழ்நாள் தடை விதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை தேர்வு நடத்தப்பட்டது.ஆனால் அதில் முறைகேடு நடந்ததால் தேர்வு தடை விதிக்கப்பட்டது. தற்போது குரூப் 4 முறைகேட்டில் 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதால் இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அந்த 196 பேருக்கும் வாழ்நாள் தடைவிதித்து குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.