பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 4 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் வருகின்ற 11,12,14,15 ஆகிய நான்கு நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது .
இதனால் தாம்பரத்தில் இருந்து இன்று, நாளை, 13,14 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.