Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி , பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே போல டெல்லி மக்களுக்கு குறைந்த விலையில் ரூ 2க்கு கோதுமைமாவு வழங்கப்படும்  என்று பாஜக அறிவித்துள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |