விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு தனவரவு அதிகரிக்கும்.
எதிரிகளும் உங்களை பணிந்து செல்வார்கள். இன்று உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மை கூடும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் எதிலும் காணப்படுவீர்கள். நீங்கள் நினைச்சா அனைத்தும் கைகூடும். குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிது வாக்குவாதங்கள் உண்டாகலாம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது சிறந்தது. எதிலும் கவனம் தேவை. நீங்கள் உங்கள் குழந்தையின் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது சிறந்தது.
அனைவரையும் அனுசரித்துச் செல்வதால் இன்றைய நாள் உங்களுக்கு இன்பம் பொங்கும் நாளாக உள்ளது. காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் அனைத்தும் விலகி செல்லும்.
சில நண்பர்கள் தாமாகவே வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். முயற்சிகளில் பலன் காண்பது சிறிது கடினம் ஆகும். மாலை நேரத்திற்குள் உங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.
உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்கு உயர்வான சிந்தனைக்கும் நல்ல பலன்களே கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்று சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும்.
சகோதரர்கள் உங்களுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இன்று தாய் தந்தையாரின் உடல் நிலை யில் கொஞ்சம் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு சில பல பிரச்சனைகள் வந்து பின்பு சரியாகி விடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.