Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வெற்றி நிச்சயம்..! திட்டமிடுதல் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு தனலாபம் சீராகவே இருக்கும்.

செய்கின்ற செயலையும் நீங்கள் நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதிலும் அவசரம் காட்டாதீர்கள்.‌ இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் தொடங்க இருப்பதால் எதிலும் கவனம் தேவை. காரியங்களில் நிதானமான போக்கையே வெளிப்படுத்துவது சிறந்தது. மனதை நீங்கள் ஒரு நிலையாக வைப்பது மிகவும் சிறந்தது.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது சிறந்தது. பெண்கள் அவசரம் மட்டும் எதிலும் படக்கூடாது. இன்று பெண்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். வழக்கத்தை விட நீங்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இன்று உங்களுக்கு பொருள் வரவை கிட்டும்.இன்று நீங்கள் யாரிடமும் எவ்விதமான வாக்குறுதியும் கொடுக்கக் கூடாது.

ஜாமீன் கையொப்பமிட எதிலும் போடக்கூடாது.நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெரியோரின் ஆலோசனைப்படி நீங்கள் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறந்தது.
கணவன் மனைவி இருவரும் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சின்னதாகத் சில பிரச்சினைகள் இல்லத்தில் தலைதூக்கும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.  சமையல்செய்யும் பொழுது பெண்கள் கவனம் அவசியம் ஆகும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபட மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.மாணவர்கள் விளையாடும் போது கவனம் தேவை. இன்று உங்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே அளிக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைப்பது உங்களுக்கு நன்மையை அளிக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |