Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஒரு அவலம்…. 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்…. மீட்பு பணி தீவிரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஹ்ரிட் என்ற கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு, நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தான். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிறுவர்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருகிறது. அனைத்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவை பிறப்பித்தபோதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |