கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபட இருக்கின்றது. அதற்கான பணிகளை சிறைத்துறை வட்டாரம் செய்து வருகின்றன.
5 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி கடந்த 17ஆம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ததோடு , ஜனாதிபதி நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நாளை துக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தண்டனையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை இருந்த மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.