ஆசியாவிலேயே கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து சட்டபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. மரிஜுவானா எனப்படும் கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் 0.2 குறைவாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக தாய்லாந்து அரசு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சுகாதார மந்திரி அனுடின் சார்ன்விரகுல் கூறியது, “பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுவெளியில் கொண்டாட்டத்திற்காக கஞ்சாவை பயன்படுத்தி அத்து மீறலில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். இது போன்றவை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் எங்களிடம் இன்னும் விதிமுறைகள் உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.