அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காரியை 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்டனின் 2 வது கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவரது இன்ஸ்டாகிராமில் லைவ் செய்தார். அங்கிருந்து பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இந்த திருமணத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதால் அவரை அனுமதிக்கவில்லை. அதனை தொடர்ந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாக அவர் வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நண்பரான ஜேசனை கடந்த 2004ஆம் ஆண்டில் 2 வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் 55 மணி நேரம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். ஜேசன் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று கூறி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரை விவாகரத்து செய்துள்ளார்.