Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுபாடு…… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவர், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைப்பதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |