Categories
தேசிய செய்திகள்

பக்கத்துவீட்டு குளியலறையில் கேமரா…. ஆளும் கட்சி பிரமுகர் தலைமறைவு…. கேரளாவில் பரபரப்பு…!!!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சிபிஎம் கிளை செயலாளர் ஷாஜகான் பக்கத்துவீட்டு குளியலறையில் கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக ரசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் குளிக்கும் காட்சிகளை ஷாஜகான் படமாக்கி இருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டு வந்து நடந்ததை பார்த்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற ஷாஜகான் கையிலிருந்த மொபைல் கீழே விழுந்தது. இதுகுறித்து அந்தப் பெண் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொடும்பா அம்பலபரம்பு கிளைச் செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கீழே விழுந்த மொபைலில் பெண் குளிக்கும் காட்சிகள் இருந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |