ஸ்டீவ் கீலர் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தன் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையையும் முறியடித்துள்ளார். இந்நிலையில், தன் ஒற்றை விரலால் அதிக எடையை தூக்கி கின்னஸ் சாதனையை வென்றது பற்றி ஸ்டீவ் கீலர் கூறியுள்ளதாவது, இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையானது என்றும், ஆனால் என் விரல்கள் மிகவும் வலுவாக உள்ளன.
எனவே எனது வலிமையை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு ஸ்டீவ் கீலர் கூறியுள்ளார். மேலும் 48 வயதான ஸ்டீவ் கீலர், கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த வலிமை பயிற்சியை செய்து வருகிறார். இதையடுத்து ஸ்டீவ் தனது 18-வது வயதிலிருந்து கராத்தே விளையாட்டை விளையாடி வந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு செட் எடையை தன்னுடைய நடுவிரலால் மட்டும் தூக்கியுள்ளார். இதற்கு பின், கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தற்போது அந்த சாதனையையும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
New record: Heaviest deadlift with one finger – 129.50 kg (285.49 lb) by Steve Keeler (UK) Six discs with one finger, just an average morning’s work for the martial artist.https://t.co/wCVywqDpTi pic.twitter.com/06WzBGvC1g — Guinness World Records (@GWR) June 10, 2022