Categories
தேசிய செய்திகள்

4 கால்கள், கைகளுடன் பிறந்த குழந்தை….. அறுசை சிகிச்சைக்கு…. உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்….!!!!

நடிகர் சோனு சூட் நாடுமுழுவதும் பிரபலம் வாய்ந்த ஒரு திரை நட்சத்திரமாவார். திரையில் மட்டும் நாயகனமாக இருந்துவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் ஏழை, எளியோருக்கு பல உதவிகளை செய்து தொண்டாற்றி வருகிறார். இப்போது நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு உதவ நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். 4 கால்கள், 4 கைகளுடன் பிறந்த குழந்தைக்கு அறுசை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.

தேவையற்ற உடல் உறுப்புகளை அகற்றும் இந்த அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த சோனு சூட், சிகிச்சை முழுவதும் சிறுமியின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பீகாரைச் சேர்ந்த சௌமுகி என்ற பெண் குழந்தைக்கு சோனு சூட் உதவி செய்தார். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்த நடிகர் உதவியோடு சம்பவ இடத்திற்கு வந்தார். அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ”குழந்தை வீட்டிற்குச் செல்லத் தயாராகிறாள்”, என்று சோனு சூட் கூறினார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் சோனு சூட் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பெரும் கவனத்தைப் பெற்றன. சோனு சூட், பிற மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட, பேருந்தில் வீடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்தார். மருத்துவச் செலவுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்த பலருக்கும் உதவி செய்தார்.

Categories

Tech |