ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகிலுள்ள காவல்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200 இரட்டை மாட்டுவண்டியில் நேற்றிரவு புறப்பட்டு, இன்றுகாலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். இந்த கிராமமக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 வருடங்களுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டுவண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம் ஆகும்.
அந்த அடிப்படையில் 2வது அணியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர். அதன்பின் நாளை வட திருக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டை அடித்து பெருமாளுக்கு நேர்த்திகடன் செலுத்தி பின், பெருமாளை தரிசிக்க இருக்கின்றனர். இன்றளவில் வசதிவாய்ப்புகள் அதிகரித்த போதும், மாட்டி வண்டிகளில் வந்து நம்பெருமாளை தரிசனம் செய்யும் இந்த நிகழ்வு ஆன்மீகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.