குழந்தை மீது கார் ஏறி இறங்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன் உறவினரின் காரை பார்த்து ஓடி வந்துள்ளார். இதை கவனிக்காத கார் ஓட்டியவர் காரை ரிவர்ஸ் எடுக்க ஓடி வந்த குழந்தை மீது கார் மோதியது. பின் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியதால் படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பெற்றோர்களே குழந்தை விஷயத்தில் எப்போதும் கவனமாக இருங்கள்.