Categories
தேசிய செய்திகள்

இனி தவறான விளம்பரங்களுக்கு…. ரூபாய் 50 லட்சம் அபராதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தவறான விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை கருத்தில் கொண்டு தவறான விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்யும் விதமாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் அச்சு போன்ற அனைத்து துறைகளிலும் வெளியிடப்படும் தவறான விளம்பரங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி தவறான வழிமுறைகளை வழங்குபவர்களுக்கு சட்டப்படி தண்டனையும் வழங்கப்படும். இதனையடுத்து பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறி விளம்பரம் செய்பவர்கள், உற்பத்தியாளர்கள், தவறான விளம்பரங்களுக்கு ஒப்புதல் வழங்குபவர்கள் போன்றவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதன்பிறகு விளம்பர முகவர், விளம்பரதாரர், சேவை வழங்குனர் மற்றும் உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளம்பரங்களானது வெளிப்படைத் தன்மையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் நுகர்வோர்கள் தாங்கள் வாங்க கூடிய பொருட்களில் இருக்கும் உண்மை தன்மைகளை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மேலும் e-commerce தளத்தில் போலியான மதிப்பாய்வுகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசாங்கம்  தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |