இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் . அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். தனது சீடர்களுக்கு சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் அதில் இணைத்திருந்தார். அந்த கடிதத்தில், “சிவ சிவ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று குறிப்பிட்டிருந்தது. . அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு என்று அவரின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெளிவுபடுத்தி நித்யானந்த ஆழ்ந்த சமாதி நிலையிலிருந்து விரைவில் உடலில் குடியேறிய சத்சங்க உரையாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்தியானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலை நித்தியானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பார்க்கும்போது நித்யானந்தா ஜீவ சமாதி ஆகிவிட்டார் போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த தகவல்களுக்கு நித்தியானந்தா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியது, “கைலாசவில் உள்ள நித்தியானந்தேஸ்வர கோயிலில் இந்த வழிபாடு நடைபெற்றது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டது. சித்திரை நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீ பரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரமாகும். அவர்தான் எல்லாருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படி கைலாசவில் நித்யானந்தா சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜை செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.