Categories
தேசிய செய்திகள்

பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை…. மத்திய அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!!!!!

இந்தியாவில் பிரிட்ஜ் மார்க்கெட்டின்  மதிப்பு மட்டும் 5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் தென் கொரியாவை சேர்ந்த சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு  நிறுவனங்களான வோல்டாஸ், காட்ட்டரேஸ் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை குறைப்பதற்காகவும், உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்க்காகவும்  பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் முழு தடை விதிக்க படாமல் போனாலும் உரிமம் அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர். தற்போது சுதந்திரமாக பிரிட்ஜ் இறக்குமதி அனுமதிக்கப்படுகின்றது. மேலும் இனி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பிரிட்ஜ் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கின்றனர். இறக்குமதியை தடை விதிப்பதால் வோல்டஸ்,  ஹோபெல்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |