Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லண்டன் காதலியை கரம்பிடித்த இன்ஜினியர்…. கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் லண்டன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள உண்ணமலைசெட்டி சாவடி பத்மாவதி நகரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ரஞ்சித் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சித் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அன்னாலுய்சா என்ற பெண்ணுடன் ரஞ்சித்துக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி அன்னாலுய்சாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணம் நடந்தது. அப்போது பெற்றோர்களும் உறவினர்களும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Categories

Tech |