Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்தை ஓட்டிய போதே…. நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த ஓட்டுநர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பேருந்தை ஓட்டிய போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து வத்தலகுண்டு மஞ்சளாற்று பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பாஸ்கரன் திடீரென மயங்கி ஸ்டேரிங் மீது விழுந்ததால் பேருந்து நின்றது. முன்னதாக பாஸ்கரன் காலை பிரேக் மீது வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து பேருந்து கண்டக்டரும், பயணிகளும் இணைந்து பாஸ்கரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாஸ்கரன் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பாஸ்கரன் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயக்கம் அடைந்த நிலையிலும் பிடித்து பயணிகளை காப்பாற்றிய பாஸ்கரனை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |