மத்திய எரிசக்திதுறை அமைச்சரான ஆர்.கே.சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 4 ஜிகாவாட்ஸ், அதாவது 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி செய்யும் அடிப்படையில் கடலுக்குள்காற்றாலைகளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்துக்கான பரிசோதனை மையத்தை அமைக்க மத்திய அரசு முன்பே முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த இடத்திலேயே புது காற்றாலை அமைக்கப்படும் என்று தெரிகிறது. கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின்சாரம் தயாரிப்பது ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலேயே இது தான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தனுஷ்கோடியில் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலையில் கடல்உள்ளே காற்றாலைகளானது அமைக்கப்படயிருக்கிறது. கடல் நீருக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் காற்றாலைகளுக்கான அடித்தளம் அமைக்கப்படவுள்ளது. இந்த அடித்தளம் வலுவானதாக இருக்கும் விதமாக, திட்ட மதிப்பின் 70 விழுக்காடு தொகை அடித்தளத்துக்கே செலவு செய்யப்படவுள்ளது.
இக்காற்றாலை மின்சாரத்தால் 4,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மே 15 -செப்டம்பர் 15 வரையே காற்றாலை மின்சார உற்பத்திக்கான சீசன் உள்ள சூழ்நிலையில், கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகளால் ஆண்டு முழுதும் மின்சாரம் கிடைக்கும் என கருதப்படுகிறது.