சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய கூலி தொழிலாளி இசக்கி பாண்டி என்பவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்ற நவம்பர் 11 2017 வருடம் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சிறுமி ஒருவர் வந்த பொழுது இசக்கி பாண்டி அவரிடம் பேச்சுக் கொடுத்து அடுத்த வாரமும் வருமாறு கூறியுள்ளார்.
அதுபடியே மீண்டும் நவம்பர் 21ஆம் தேதி 2017 ஆம் வருடம் சிறுமி வந்தபொழுது இசக்கி பாண்டி சிறுமியை அழைத்துக் கொண்டு சமத்துவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின் போக்சோ சட்டத்தின் கீழ் இசக்கி பாண்டியை கைது செய்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று 20 வருடங்கள் இசக்கி பாண்டிக்கு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.