Categories
மாநில செய்திகள்

“சூப்பரோ சூப்பர்” அள்ளித்தரும் அரசுப்பள்ளிகள்…. என்னென்ன தெரியுமா…? பட்டியல் போட்ட அமைச்சர்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் வசதிகளை பட்டியல் போட்டு கூறியுள்ளார்.

அதன்படி புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள், மடிக் கணினி, உபகரணங்கள், முட்டையுடன் கூடிய மதிய உணவு, மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து வசதி, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, சிற்றுண்டி இவை அனைத்தும் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |