விளையாடி கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கமுகுமலை பகுதியில் முத்துப்பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின், ஜேஸ்மிதா என்ற 2 குழந்தைகள் இருந்தனர். தற்போது முத்துப்பழனி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதுப்பழனி பழங்கரைப் பகுதியில் இருசக்கர வாகனம் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அவரது மகனான அஸ்வின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சிறுமி ஜேஸ்மிதா அப்பகுதியில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.
இதனையடுத்து விளையாட சென்ற ஜேஸ்மிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாயும் பாட்டியும் தேடினர். அப்போது அப்பகுதியில் மூடாமல் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி ஜேஸ்மிதா விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை உடனடியாக மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.