Categories
உலக செய்திகள்

ஓவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம்…. கனடா அரசு அதிரடி முடிவு….!!!!!!!

சிகரெட் மீதான எச்சரிக்கை வாசகத்தை பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது.

கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை தடை ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட்  செய்தியாளர்களிடம் பேசும்போது, புகையிலைப் பொருட்களில்  தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கை விடுப்பது என்பது  அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவுகிறது. மேலும் சமூக சூழ்நிலைகளால் ஒருமுறை சிகரெட் புகைக்க செல்லும் இளைஞர் சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளிவிட்டு செல்கின்றார்.

இது தவிர்க்கப் படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனை காலம் இன்றிலிருந்து தொடங்க உள்ளது. வருகின்ற 2023 வருடத்தின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது. அந்த சிகரெட்டுகள் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் என தெரிவித்துள்ள பென்னட் தற்போது ஒவ்வொரு தடவையும் இழுக்கும்போது விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். இதனால் உலக அளவில் ஒவ்வொரு சிகரெட் மீது எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியிருக்கின்றது.

Categories

Tech |