Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும்…. 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 22 இடங்களில் கொரோனா அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. அதனால் பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 42 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி இன்னும் செலுத்தவில்லை அவர்கள் தொற்று பரவலை கருத்தில் கொண்டு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |