பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.