பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடியின் உத்தரவின்படி புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடத்தில் 8 பேர் புகை பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து பொது இடத்தில் நின்று புகை பிடித்த குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து தலா 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று மீண்டும் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.