கழிவறையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் சுப்பிரமணியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு குளிக்க சென்ற சுப்பிரமணியன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மணிமேகலை அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணிமேகலை தனது கணவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.