தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.