Categories
மாநில செய்திகள்

“ஹேப்பியோ ஹேப்பி” அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்….. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிக தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |