இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரூபாய் 22 முதல் 23 வரை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டது.
ஆனால் ஏராளமான வெங்காயம் இன்னும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் தேக்கம் அடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் மானிய விலையில் ஒரு கிலோ 22 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு விற்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் வெங்காய உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 24.45 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும் என மத்திய அரசு கூறியுள்ளது.