Categories
உலக செய்திகள்

துருக்கி: மினி பஸ் மீது டிரக் மோதல்…. நொடியில் பறிபோன 8 உயிர்…. பெரும் சோகம்….!!!!

துருக்கியின் வட மேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று மினி பஸ் மீது டிரக் மோதிய கோரவிபத்தில் 8 பேர் இறந்தனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர். துர்சன்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ், புறப்பட்ட சிறிதுநேரத்தில் சிட்டி சென்டரில் பால் ஏற்றிவந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. இதனிடையில் விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பலத்த மழை மற்றும் முறையற்ற பாதை மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறிய பலிகேசிர் கவர்னர் ஹசன் சில்டாக், விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக சட்ட அமலாக்கம் விசாரித்து வருகிறது என்று கூறினார்.

Categories

Tech |