Categories
உலக செய்திகள்

“அதிக தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல்”…. ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ள வீடியோ….!!!!!!!

கொலம்பியா நாட்டிற்கு அருகில் கரீபியன் கடல் பகுதியில் கடந்த 1708 ஆம் வருடம் சான் ஜோஸ் எனும் கப்பல் சுமார் 600 பேருடன் கடலில் மூழ்கியுள்ளது. அதில் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. மேலும் உலகிலேயே அதிக தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஆக இது கருதப்படுகின்றது. இந்த கப்பலை தேடும் பணிகள் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் 2015 ஆம் வருடம் கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை தற்போது ஸ்பெயின் அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றது. மேலும் நீலம், பச்சை போன்ற நிறங்களில் கடலின் அடியில்  தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள், பீங்கான், கோப்பைகள் போன்றவை சிதறி கிடக்கின்றது. மேலும் ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில்  கிடக்கின்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |