வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியகுழு கூட்டம் அந்நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் தலைமையில் நடைபெற்றது. அதாவது 3 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவபலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் வட கொரியாவின் புது வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் என்ற பெண் நியமிக்கப்பட்டார். வட கொரியா வரலாற்றில் வெளியுறவு மந்திரியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். இதனிடையில் மூத்த தூதரக அதிகாரியான சோ சோன்-ஹுய், வட கொரியா-அமெரிக்கா இடையேயான அணுஆயுத பேச்சுவார்த்தையில் கிம்முக்கு நெருக்கமான உதவியாளராக பணிபுரிந்தவர் ஆவார். அத்துடன் இவர் துணை வெளியுறவு மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.