தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கந்துவட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம் நடந்தது. அதன் காரணமாக மஹராஜகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த கோவிந்த சிங் என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாராவது கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்