Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!!

ரயில்வே வாரிய இரண்டாம்கட்ட தேர்வுகள் ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி – பெங்களூரு ரயில் நாளை முதல், பெங்களூரு – திருநெல்வேலி ரயில் ஜூன் 17 முதல்,  தூத்துக்குடி – கர்னூல் ரயில் நாளை முதல், கர்நூல் – தூத்துக்குடி ரயில் ஜூன் 17 முதல்,  திருச்சி ரயில் நாளை,  திருச்சி – கொல்லம் ரயில் ஜூன் 17 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த  ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு  குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஏழு இரண்டாம் வகுப்பு  படுக்கை வசதி பெட்டிகள். 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2  மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

Categories

Tech |