தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்த போது 2011 முதல் 16 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கணேஷ் குமார் என்பவர் அளித்த புகாரில் 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் முன் ஜாமின் பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி.
இந்த நிலையில் இன்று காலை சென்னை கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அலுவலகம் , வீடு என சோதனை நடத்திய நிலையில் எங்கே ? கைது செய்ய படுவோமா என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி அவசர முறையீடு செய்துள்ளார்.
இந்தநிலையில் எம் எல் ஏ செந்தில் பாலாஜி வீட்டில் சொத்து ஆவணங்கள், நகைகள் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காசோலைகள், வங்கிக் கணக்குபுத்தகங்கள், இருப்பு பெட்டக சாவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.