வரும் ஜூன் 23ம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வரும் 14ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.