தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் மணிமாறன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிமாறனின் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தீபக் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தொட்டில் கட்டிய சேலை தீபக்கின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சு திணறிய தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.