Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும்.. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் நம்பிக்கையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்று பணத் தேவைகள் ஏற்படும், இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம், ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும், வாகன யோகம் கிடைக்கும் ,எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகும். இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் கடுமையான உழைப்பு இருக்கும். உழைப்புடன் பாடங்களை சிறப்பாக படித்து முன்னேறி செல்வீர்கள். இன்று  ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேளுங்கள், அது போதும்.
இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் .
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் ; வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |