அறுவகை சிகிச்சை முடிந்த சில நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி வினோதினி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்கள் கவனக்குறைவால் வினோதினி உயிரிழந்ததாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோதினியின் உடலை வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில் உயிரிழந்த வினோதினியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் அவரது குழந்தைகளின் படிப்புக்கு ஆகும் செலவு மொத்தத்தையும் அரசு ஏற்க வேண்டும் என வக்கீல் தாமஸ் பர்னபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.