பெண்ணை தாக்கிய 2-வது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் முத்துலட்சுமி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக முத்துலட்சுமியின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை முத்துலட்சுமி 2-தாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை விவாகரத்து செய்ய நினைத்தார்.
எனவே இதுவரை நான் உனக்காக செலவு செய்த பணத்தை திரும்பி தா என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.