லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் பாஷா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாஷாவின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.