பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பகுதியில் நவாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிராஜி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிராஜி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த நவாஷ் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.