சமூக வலைதளத்தில் முதலமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த ஸ்டுடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த, மாசிலாமணி திமுக முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆக இருந்தவர். ஆனதாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன்(57) என்பவர் டுவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளதாக திமுகவை சேர்ந்த மாசிலாமணி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்ததில் விஜயராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிலரை பற்றி தரக்குறைவாக பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.