Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. அசால்ட்டாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மாரடைப்பால் சப் – இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள அசோக் நகரில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜய் பாபு என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய மனைவி சரண்யா வடபழனி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் பாவுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்பாபு வீட்டில் இருப்பவர்களிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் விஜய்பாபு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

இந்நிலையில் விஜய் பாபு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வடபழனியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு விஜய் பாபுவை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜய்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு விஜய் பாபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குமரன் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |