01.02.2020 தை 18, சனிக்கிழமை,
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள்
காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00
இன்றைய தின ராசிபலன்
மேஷம்:
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். உறவினர் மூலம் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் அகலும் ஒற்றுமையும் ஆனந்தமும் கூடும். புதிய வியாபாரம் தொடங்கும் எண்ணம் இன்று வெற்றிகரமாக நிறைவேறும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்:
இன்று பெரியவர்களின் மன அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாக கூடும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். இன்று எதிலும் பொறுமையாக இருத்தல் நன்று. மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் உத்தமம். உடல்நல பாதிப்புகள் இன்று குறைவடையும்.
மிதுனம்:
இன்று நீங்கள் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றியடையும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். பணிபுரிபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
கடகம்:
இன்று திடீர் பணவரவு ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள் சகோதர சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். உடல்நலம் சீராகும். பணி தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம் அதுமட்டுமின்றி பயணத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இன்று விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
இன்று நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளினால் நன்மை நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் இன்று கிடைக்கும். தொழிலில் லாபம் பன்மடங்கு ஆகும்.
கன்னி:
இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சனை உருவாகலாம். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். வெளியூர் பயணங்களை இன்று தவிர்ப்பது மிகவும் சிறந்தது. பணியில் மிகவும் கவனமாக செயல்படுங்கள்.
துலாம்:
இன்று இல்லத்தில் உறவினர்களால் சாந்தோஷமானா சூழல் நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். வேலையில் உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமையாக பணிபுரிவார்கள். கடன்கள் அனைத்தும் வசூலாகும் பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று மனதிற்கு புதிய பலம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் நல்லதொரு முன்னேற்றம் காணப்படும். இன்று கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக அமையும். சுபகாரியங்கள் கைகூடும். இன்று பழைய கடன்கள் தீரும் அதனால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
தனுசு:
இன்று உடல் ரீதியாக நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் உருவாகலாம். தொழிலில் பணியாட்களால் மனக்கசப்புகள் ஏற்படும். இன்று உங்கள் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து கடன்களை குறைய செய்வார்கள். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெற முடியும்.
மகரம்:
இன்று உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். பங்குதாரர்களின் யோசனையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களின் நட்பு நல்லதொரு மாற்றத்தை கொடுக்கும். இன்று பொன் பொருள் சேரும்.
கும்பம்:
இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மிகவும் கடினமான காரியம் கூட மிகவும் எளிதாகச் செய்து முடித்து விடுவீர்கள். இன்று ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும்.
மீனம்:
இன்று மனதில் உறுதியுடன் வரும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டி வரும். இன்று வயதில் பெரியவர்களிடம் தேவையில்லாத கருத்து வேற்றுமை ஏற்படும். வாகனங்களின் மூலம் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் நல்ல பலன்கள் கிட்டும். லாபம் பன்மடங்கு ஆகும்.